மாணவி, இளம்பெண் மாயம்
மாணவி, இளம்பெண் மாயம்ஈரோடு, நவ. 6-ஈரோடு, கொளாநல்லி சத்திரத்தை சேர்ந்த பிளம்பர் சரவணன். இவரின் மகள் ராஜலட்சுமி, 19; கரூரில் தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து வருகிறார். கடந்த, ௩ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நிலையில் மாயமானார். அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. சரவணன் புகாரின்படி மலையம்பாளையம் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.* சத்தியமங்கலம் அருகேயுள்ள கொமராபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வி. கூலி தொழிலாளியான இவரின் மகள் அபிநயா, 21; பி.காம்., படித்து விட்டு வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் செல்வி புகாரின்படி, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.