உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரங்கநாதர் கோவிலில் சுதர்சன ஹோமம்

அரங்கநாதர் கோவிலில் சுதர்சன ஹோமம்

ஈரோடு: ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா, சுதர்சன யாகத்துடன் கடந்த, 12ம் தேதி காலை துவங்கியது. இதையடுத்து பல்வேறு யாக பூஜைகள் நடந்தன. விழா முக்கிய நிகழ்வாக நேற்று காலை, விஸ்வரூப தரிசனம், வேத பாராயணம், மகா கும்ப ஆராதனம் உள்ளிட்டவை நடந்-தது. பின் சுதர்சன ஹோமம் தொடங்கியது. ஒரு லட்சத்து எட்டு ஆவர்த்தியுடன் துவங்கிய ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலில் கலச புறப்பாடு, மூலமூர்த்தி, பரிகார மூர்த்-திகளுக்கு கும்ப தீர்த்தம், சக்கரத்தாழ்வார் உற்சவருக்கு திருமஞ்-சனம் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. வீர ஆஞ்-சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி