உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடி மலைவாழ் மக்களை குடிபெயர்வு செய்யக்கூடாது

தாளவாடி மலைவாழ் மக்களை குடிபெயர்வு செய்யக்கூடாது

'தாளவாடி மலைவாழ் மக்களை குடிபெயர்வு செய்யக்கூடாது' தாளவாடி, அக். 20-தாளவாடி அருகே உள்ள பீரேஸ்வரர் கோவிலில், அனைத்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. குமார ரவிக்குமார், மகேந்திர குமார் தலைமை வகித்தனர்.தாளவாடி தாலுகாவில் உள்ள வனப்பகுதி எல்லையில், ரயில்வே தண்டவாளத்தில் போர்க்கால அடிப்படையில் வேலி அமைக்க வேண்டும். தாளவாடி வட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். வனப்பகுதி கோவில்களில் வழிபாடு நடத்த வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. மனித-விலங்கு மோதலில் ஏற்படும் உயிரிழப்புக்கு, கர்நாடக மாநிலத்தில் வழங்குவது போல், 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தாளவாடி வட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களை எக்காரணம் கொண்டும் குடிபெயர்வு செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆசனுார், தாளவாடி விவசாயிகள் நவ.,௫ம் தேதி தாளவாடி தாசில்தாரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்தனர். கூட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை