அம்ரூத் திட்ட குழியில் சிக்கித் தவித்த டாரஸ் லாரி
அந்தியூர், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பின்புறமுள்ள சிவசக்தி நகர் ஈஸ்வரர் கோவில் திருப்பணி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. இப்பணிக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து, டாரஸ் லாரியில் கிரானைட் கற்கள் நேற்று கொண்டு வரப்பட்டன. கோவில் முன் லாரி வந்தபோது, அம்ரூத் குடிநீர் திட்டப்பணிக்கு தோண்டி மூடப்பட்ட குழியில் வலது பக்க முன் சக்கரம் இறங்கியது. டிரைவரால் மீட்க முடியாத நிலையில், கிரானைட் கற்களை லாரியில் இருந்து அகற்றி, இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதனால் நான்கு சக்கர வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.