மேலும் செய்திகள்
இளைஞர் கொலை விவகாரம்; பெண் உட்பட 3 பேர் கைது
10-Jul-2025
சென்னிமலை, சென்னிமலை யூனியன் பசுவபட்டி ஊராட்சி கணபதிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சஞ்சீவ், 26; சிப்காட் தனியார் நிறுவன ஊழியர். நேற்று மதியம் வேலைக்கு சிப்காட் செல்ல, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் புறப்பட்டார். சென்னிமலை-பெருந்துறை சாலையில் பாலமுருகன் தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் சென்றார்.அப்போது வெள்ளோடு, ஞானிபாளையத்தை சேர்ந்த மயில்வாகனன், 41; தனது எலக்ட்ரிக் காரில் ரிவர்ஸ் எடுத்து சாலைக்கு வந்தார். திடீரென வந்ததால் சஞ்சய் ஓட்டிச் சென்ற பைக் ஹேண்டில் பார், காரின் பின்பகுதியில் இடித்து நிலைதடுமாறியதில், சாலையில் பைக்குடன் விழுந்தார். அதேசமயம் சஞ்சீவ் பைக்குக்கு பின்னால் வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த சஞ்சீவ், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். லாரி ஓட்டி வந்த சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டி, பரவக்காடு பூபதியிடம், 61, சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
10-Jul-2025