மேலும் செய்திகள்
பைக் விபத்தில் வாலிபர் பலி
14-Jul-2025
ஈரோடு, ஈரோடு, கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சிவசுப்பிரமணி, 30. கடந்த 29ம் தேதி நள்ளிரவு 1:00 மணிக்கு யமஹா பைக்கில், சென்னிமலை சாலை சிப்காட் எதிரே சென்றார். எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதினார். இதில் அவருக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
14-Jul-2025