மேலும் செய்திகள்
தடுப்பு சுவரில் மோதிய கார் கோவை அருகே இருவர் பலி
02-Jun-2025
சென்னிமலை, அரச்சலுாரை அடுத்த கொமராபாளையம், சகாயபுரம், பழனிசாமி மகன் விக்னேஷ், 23; பெயிண்டர், இவரின் உறவினரான அதே பகுதியைை சேர்ந்தவர் மதன், 22; சென்னிமலையில் இருந்து கொமரபாளையத்துக்கு கே.டி.எம்., பைக்கில் இருவரும் நேற்று மாலை சென்றனர். கே.ஜி.வலசு-கொமராபாளையம் சாலை, சில்லாங்காட்டு தோட்டம் அருகில், எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த ஒரு டிப்பர் லாரி, மதன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் அமர்ந்து சென்ற விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். மதன் படுகாயம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் சாவடி, மறவாபாளையத்தை சேர்ந்த டிரைவர் சிவசாமியை, 30, சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.
02-Jun-2025