ஈரோடு:ஈரோடு
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்த வங்கியாளர்கள்
கூட்டத்தில், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி
சார்பில் ஈரோடு மாவட்டத்துக்கான, 2024-25ம் ஆண்டுக்கான வளர் சார்ந்த
கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.மாவட்டத்துக்கான கடன்
திறனை, 29,663 கோடியாக நபார்டு வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த இலக்கு,
2023-24ம் ஆண்டு இலக்கைவிட, 28.30 சதவீதம் அதிகம். வருமாண்டில்,
வேளாண்மை, வேளாண்மை சார்ந்த துணை தொழில்களுக்கான கடன், 13,7௩௦ கோடி
ரூபாய்; நுண், சிறு, குறு தொழில்களுக்கான கடன், 12,809 கோடி ரூபாய்;
ஏற்றுமதிக்கு, 393.75 கோடி; கல்விக்கடனுக்காக, 466.92 கோடி; வீடு
கட்டுதல், மீள் சக்திக்கு, 1,091 கோடி மற்றும் 94.67 கோடி ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கடன்களை தாமதமின்றி விரைவாக வழங்க
நடவடிக்கை எடுக்க வங்கி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டனர். பின்,
மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கி, சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு
பரிசு வழங்கப்பட்டது.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்
ஆனந்தகுமார், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அமிர்தவள்ளி, நபார்டு
வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.