மேலும் செய்திகள்
பாறாங்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
24-Sep-2024
சத்தி: அத்தாணியில் இருந்து கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு, சேனைக்கிழங்கு ஏற்றிய வேன், நேற்று காலை சென்றது. பங்களாபுதுார், துறையம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ராமன், 26, ஓட்டினார். சத்தி-மேட்டுப்பாளையம் ரோட்டில் அக்கரை நெகமம் பிரிவை கடந்து வேன் சென்றது. முன்னால் சென்ற டூவீலர் திடீரென நின்றதால், அதன் மீது மோதுவதை தவிர்க்க, ராமன் திடீர் பிரேக் போட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், வாய்க்கால் பாலத்தின் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்த இடத்தில் இருந்து சில அடி தொலைவில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதன் மீது மோதாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வேனில் இருந்த சேனைக்கிழங்கு சாலையில் சிதறியது. டிரைவர் ராமன் சிறு காயத்துடன் தப்பினார்.
24-Sep-2024