காட்டாற்றில் பஸ்சை இயக்கிய டிரைவர்
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, கடம்பூர் அருகே, 23 கி.மீ.,தொலைவில் மாக்கம்பாளையம் மலை கிராமம் உள்ளது. இங்கு செல்ல குரும்பூர்பள்ளம், சக்கரைபள்ளம் என இரு பள்-ளங்களை கடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் இரு பள்ளங்களிலும் வெள்ளம் பாய்ந்தோடும். இதனால் கிராமங்க-ளுக்கு அனைத்து போக்குவரத்தும் தடைபடும். தற்போது கடந்த சில நாட்களாக, தொடர்மழை பெய்கிறது.இதனால் சக்கரைபள்ளத்தில் வெள்ளம் ஓடுவதால், அரசு பஸ் அதன் பிறகு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இறக்கி விடப்படும் பயணிகள், காட்டாற்றை அச்சத்துடன் கடந்து மறுகரைக்கு சென்று டெம்போவில் மாக்கம்பாளையத்துக்கு செல்-கின்றனர். நேற்று காலை குரும்பூர் பள்ளத்திலும் மழைநீர் ஓடி-யது. இதனால் அரசு பஸ் செல்ல முடியுமா? என்று பயணிகள் சந்-தேகித்தனர். ஆனால், டிரைவர் சமார்த்தியமாக காட்டாற்றில் பஸ்சை இயக்கி சென்றார்.