உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயியை துரத்திய யானை

விவசாயியை துரத்திய யானை

பவானி:அம்மாபேட்டை அருகேயுள்ள சென்னம்பட்டி, முரளி லைன் தோட்டத்தை சேர்ந்த விவசாயி சரவணன், 42; நேற்று முன்தினம் அதிகாலை, வனத்தை ஒட்டியுள்ள தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச பைக்கில் சென்றார். அப்போது மரத்தடியில் நின்று கொண்டிருந்த யானையை கண்டு அதிர்ச்சியடைந்து பைக்கை நிறுத்தினார். இதை பார்த்த யானை சரவணனை துரத்தியது. பைக்கிலிருந்து குதித்து சரவணன் தப்பி ஓடினார். இதனால் பைக்கை மிதித்து நொறுக்கியது. பிறகு அக்கம் பக்க விவசாயிகளுடன் சேர்ந்து யானையை துரத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ