ரேஷன் கடையை சூறையாடிய யானை
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி மாயாற்றின் கரையில் தெங்குமரஹடா வன கிராமம் உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை, தெங்குமரஹடா வன கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள ரேஷன்கடை கதவை உடைத்து, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும் துாக்கி வீசியும் சூறையாடியது. சத்தம் கேட்டு வந்த மக்கள் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.