உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூத் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி எட்டு தொகுதிகளிலும் நடந்தது

பூத் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி எட்டு தொகுதிகளிலும் நடந்தது

ஈரோடு:லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,222 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 10 ஆயிரத்து, 970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வழிமுறை குறித்து, நான்கு கட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்ட பயிற்சி, எட்டு சட்டசபை தொகுதிகளிலும் நடந்தது.இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பயிற்சி, ரங்கம்பாளையம் டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லுாரி; ஈரோடு மேற்கு தொகுதிக்கான பயிற்சி ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய பள்ளி; மொடக்குறிச்சி தொகுதிக்கு மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி; பெருந்துறை தொகுதிக்கு பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. பவானி தொகுதிக்கான பவானி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி; அந்தியூர் தொகுதிக்கு மங்களம் மேல்நிலை பள்ளி; கோபி தொகுதிக்கு மொடச்சூர் சாரதா மெட்ரிக் பள்ளி; பவானிசாகர் தொகுதிக்கு சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லுாரியிலும் நடந்தது.இந்த பயிற்சி மையங்களில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர், முதல் நிலை, 2-ம் நிலை, 3-ம் நிலை, 4-ம் நிலை அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ