உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தவர் கைது

550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தவர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், வெள்ளத்திருப்பூர் - பவானி சாலை கல்பாவி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது வந்த ஒரு மாருதி-800 காரில் சோதனை செய்தனர். காரில், 11 மூட்டைகளில், 550 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசியை கடத்தி வந்த, பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த உதயகுமார், 55, என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர்.இவர் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வீடுவீடாக சென்று சேகரித்து, வெளி மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி