போதையில் கார் ஓட்டிய மெக்கானிக் சோதனைக்கு மறுத்து வாக்குவாதம்
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, காளை மாட்டு சிலை பகு-தியில் ஒரு வெள்ளை நிற மாருதி ஆம்னி கார் வேகமாக, தாறுமா-றாக விபத்து ஏற்படுத்தும்படி நேற்று வந்தது. அப்பகுதியினர் அச்-சமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.காந்திஜி சாலையில் வந்த காரை, பன்னீர்செல்வம் பூங்கா சந்-திப்பில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்த நபர், டிரைவர் இருக்கையில் இருந்து எழுந்து, பின் இருக்-கைக்கு மாறி அமர்ந்து கீழே இறங்க மறுத்தார்.அவரை வெளியேற்றி, போதையில் உள்ளாரா? என கண்டறியும் கருவியில் ஊதும்படி கூறினர். அப்போது போலீசாருடன் வாக்கு-வாதம் செய்தார். இறுதியாக அவர் ஊதியபோது, 209 பாயிண்ட் என காட்டியதால் (மது அருந்தாதவர்களுக்கு, 30 பாயிண்டுக்கு கீழ் நெகட்டிவ் என தெரிவிக்கும். 30 பாயிண்டுக்கு மேல் இருந்தால் பாசிட்டிவ் ஆகும்), போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் கவுதம் என தெரிந்தது. நண்பர்களுடன் மது குடித்துவிட்டு வந்ததை உறுதி செய்தனர். காரை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.