உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துக்க வீட்டுக்கு சென்று திரும்பியவர் துயர முடிவு

துக்க வீட்டுக்கு சென்று திரும்பியவர் துயர முடிவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 31; உறவினரின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மது போதையில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வீட்டுக்கு சென்றார். இதனால் அவரது மனைவி, மீண்டும் வெளியே சென்று மது அருந்தி விடுவாரோ என எண்ணி, வீட்டுக்கு வெளியே தாழிட்-டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கணேசன் சேலையில் துாக்கிட்ட நிலையில் தொங்கினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோத-னையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை