உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

கோபி : கோபி அருகே கூகலுாரை சேர்ந்தவர் அருண்குமார், 24, கட்டட தொழிலாளி; புதுக்கரைப்புதுார்-கூகலுார் சாலையில், நேற்று முன்தினம் மதியம் யமாகா பைக்கில் சென்றார்.அதே பகுதியை சேர்ந்த வெங்கிட்டான், 40, ஓட்டி வந்த மினி சரக்கு ஆட்டோ மீது, அருண்குமாரின் பைக் மோதியது. இதில் காயமடைந்த அருண்குமார் சிகிச்சை பலனின்றி, கோபி அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். அவரின் மனைவி சந்தியா புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ