மேலும் செய்திகள்
மரத்தை வெட்டியதற்கு மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்
22-Jun-2025
ஈரோடு, ஈரோடு-கரூர் பைபாஸ் ரோட்டில் பிரபல தனியார் பள்ளி எதிரே வசிப்பவர் விக்னேஷ்வர். சிவில் என்ஜினியர். இவர் வீட்டருகே தோட்டம் அமைத்து மரம், செடி வளர்த்து வருகிறார். இரு நாட்களாக தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை பார்த்தபடி வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்தபடி இருந்தது. இந்நிலையில் வீட்டு பணிப்பெண் நேற்று குறிப்பிட்ட மரத்தை பார்த்தபோது, பாம்பு நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாம்பு பிடி வீரரான யுவராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உஷாரான பாம்பு, மரத்தில் இருந்து இறங்கி, தோட்டத்தில் போட்டு வைத்திருந்த பழைய இரும்பு குழாய்களுக்கு அடியில் பதுங்கியிருந்தது. வெகு நேர தேடுதலுக்கு பிறகு பாம்பை யுவராஜ் பிடித்தார். மஞ்சள் நிற சாரை என்பதும், ௯ அடி நீளத்திலும் இருந்தது. வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
22-Jun-2025