உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சித்தார் கோவிலில் உண்டியல் திருட்டு

சித்தார் கோவிலில் உண்டியல் திருட்டு

பவானி:பவானி அருகே சித்தாரில் பிரசித்தி பெற்ற உருமாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. பூசாரி பரத், 27, நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். கோவில் கதவின் மூன்று பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோ மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆய்வு செய்த நிலையில், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. கைவரிசை காட்டிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை