உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருட வாகனத்தில் திம்மராய பெருமாள்

கருட வாகனத்தில் திம்மராய பெருமாள்

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகே கீழ் முடுதுறையில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி பிரமோற்சவ திருவிழா காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் கடந்த 29ல் துவங்கியது. பிரமோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள்,கருட வாகனத்தில் எழுந்தருளி கோவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று குதிரை வாகனத்தில் உற்சவர் வீதி உலா நடக்கிறது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை