உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

ஈரோடு : ஈரோடு ரயில்வே காலனியில் சித்தி விநாயகர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆஞ்சநேயர், ஐயப்பனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் நேற்று மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருமணம் ஆகாதவர்களுக்கு கோவில் அர்ச்சகர் மாலை அணிவித்தார். இதையொட்டி, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி