உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளம்பெண், சிறுமி உள்பட மூவர் மாயம்

இளம்பெண், சிறுமி உள்பட மூவர் மாயம்

ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், ஆஸ்ரம் பள்ளி அருகேயுள்ள பகுதியை சேர்ந்த டிரைவர் லட்சுமணன் மகள் கஸ்துாரி, 19; வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. லட்சுமணன் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.*சோலார், வசந்தம் நகரை சேர்ந்த தங்கராஜ் மகள் நதியா, 15; தந்தை இறந்த நிலையில் தாய் திலகவதி வளர்க்கிறார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர், அதன் பின் படிக்கவில்லை. அடிக்கடி போனில் பேசி கொண்டிருந்தார். தாய் கண்டித்த நிலையில், சமையல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. திலகவதி புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார், தேடி வருகின்றனர்.* கோபியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ், 39; இவரின் மனைவி ஐஸ்வர்யா, 31; தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா திடீரென மாயமானார். கோவிந்தராஜ் புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்