உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு தொகுதியில் மும்முனை போட்டி

ஈரோடு தொகுதியில் மும்முனை போட்டி

ஈரோடு:தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், தி.மு.க., போட்டியிடும் தொகுதியில் ஈரோடு இடம் பெற்றுள்ளது.கடந்த, 2009க்கு முன்பு வரை திருச்செங்கோடு லோக்சபா தொகுதிக்குள், ஈரோடு சட்டசபை தொகுதி இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் ஈரோடு லோக்சபா தொகுதி அறிவிக்கப்பட்ட பின், 2009ல் தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் இளங்கோவன், 2014ல் தி.மு.க., சார்பில் பவித்ரவள்ளி, 2019 ல் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு தி.மு.க., சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிட்டனர்.இதில் கணேசமூர்த்தி மட்டுமே வென்றார். தற்போது மீண்டும் தி.மு.க., போட்டியிடவுள்ளதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேநேரம் பா.ஜ., கூட்டணியில் த.மா.கா.,வுக்கு ஈரோடு ஒதுக்கப்படவுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க.,வே களமிறங்குகிறது.இது தவிர சிறிய கட்சிகளிலும், சுயேட்சையாக பலர் நிறுத்தப்பட்டாலும், அரசியல் கட்சிகள் ரீதியில் மும்முனைப்போட்டி உறுதியாகியுள்ளது.இதனால் கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், தொகுதியில் பிரசாரம் களை கட்டத் தொடங்கி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ