உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த டிப்பர் லாரி

மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த டிப்பர் லாரி

புன்செய்புளியம்பட்டி:கோவையில் செயல்படும் ஒரு கிரஷர் நிறுவனத்தில் இருந்து ஜல்லி ஏற்றிய ஒரு லாரி, பெருந்துறைக்கு நேற்று மாலை புறப்பட்டது. திங்களூரை சேர்ந்த பிரபு, 32. ஓட்டினார். புன்செய் புளியம்பட்டி அடுத்த கோவில்புதுார் தண்ணீர் பந்தல் இணைப்பு சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. லாரியில் இருந்த ஜல்லிக்கற்கள் சிதறின. டிரைவர் பிரபு லேசான காயமடைந்தார். அதேசமயம் லாரி மோதியதில் மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை