மேலும் செய்திகள்
நம்பியூரில் 27 மி.மீ., மழை
07-Nov-2026
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. காலை, 11:00 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்தது. இடைவெளி விட்டு, 12:00 மணியளவில் மீண்டும் மழை பரவலாக பெய்தது. மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய சாரல் மழை துாறி கொண்டே இருந்தது. தொடர் சாரல் மழையால், மக்கள் அவதிக்குஆளாகினர்.* ஈரோடு மாநகரில் நேற்று காலை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. காலை, 11:35 மணிக்கு துாறலாக மழை பெய்ய தொடங்கியது. சில நிமிடங்களில் வேகமெடுத்து, 15 நிமிடம் கொட்டி தீர்த்தது. இதனால் திறந்தவெளியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய சிறுவர்கள் சிறிது நேரம் முடங்க நேரிட்டது. மழை நின்றவுடன் தங்கள் கொண்டாட்டத்தை மீண்டும் தொடங்கினர்.
07-Nov-2026