உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்கள்

கொடிவேரி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்கள்

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் கோவில் திருவிழா-வுக்காக, பவானி ஆற்றில் தீர்த்தம் எடுக்கவும் மக்கள் வருகின்-றனர். இவ்வாறு வருவோர் பஸ்கள் மற்றும் வாகனங்களை, பிரதான சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர். இந்த வாகனங்-களை பார்த்து காரில் வருவோரும் அதை ஒட்டி நிறுத்துகின்றனர். இதனால் விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயி-களின் வாகனங்கள் செல்ல முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடத்துார் போலீசார் மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் இணைந்து, சாலையை ஆக்கிர மிக்கும் வாகன ஓட்டிகளை, அதற்கான பார்க்கிங் பகுதியில் நிறுத்த வழி-வகை செய்தால், நெரிசல் பிரச்னை முடிவுக்கு வரும் என்று, விவ-சாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை