உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் பவானிசாகரில் குவிந்த பயணிகள்

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் பவானிசாகரில் குவிந்த பயணிகள்

புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக பவானிசாகர் பூங்கா உள்ளது. ஆடிப்பெருக்கு தினமான நேற்று, ஈரோடு மட்டுமின்றி, கோவை,திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்தனர். பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடியும் சறுக்குகளில் ஏறி விளையாடியும், குதுாகலித்தனர். சிறுவர்கள் பெற்றோர்களுடன் ஆர்வத்துடன் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். பூங்கா முன்புறம் மீன்ரோஸ்ட் விற்பனை களை கட்டியது. பூங்கா மற்றும் நீர்த்தேக்க பகுதிகளில் பவானிசாகர் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பூங்கா முன்புற சாலையில் குவிந்ததால், பவானிசாகர் அணை முன்புற சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை