உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விரிவாக்க பணியால் மீண்டும் போக்குவரத்து மாற்றம்

விரிவாக்க பணியால் மீண்டும் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு:ஈரோடு-சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி மேற்கொள்-ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.டி.ஐ., முன்புறம் உள்ள பாலம் இடித்து அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி துவங்கி உள்ளது. இதற்காக ஈரோட்டில் இருந்து ரங்கம்பா-ளையம், வெள்ளோடு, சென்னிமலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் வழியாக திருப்பி விடப்பட்டது. இதற்கிடையில் சாலை விரிவாக்கத்துக்கான பணி ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டுளது.எனவே மீண்டும் சில தினங்களாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் காசிபாளையம் வழியாக முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் சென்று அங்கிருந்து ரங்கம்பாளையம் செல்கிறது. ஒரே நேரத்தில் சாலை விரிவாக்க பணி, பாலம் கட்டுமான பணி துவங்கி இருப்பதால் விரைவில் விரிவாக்க பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை