ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, தட்சின் ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு), அனைத்து இந்திய லோகோ ரயில் ஓட்டுனர்கள் சங்கம் இணைந்து, ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயத்தை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். டி.ஆர்.இ.யு., கிளை தலைவர் முருகேசன் தலைமையில், ரயில்வே டிரைவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.