உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ-டெண்டர் குறித்து கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பயிற்சி

இ-டெண்டர் குறித்து கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பயிற்சி

ஈரோடு,:தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து, 70 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியர்கள், பொது மேலாளர்கள், பணியாளர்களுக்கு மின்னணு ஏல முறை (இ-டெண்டர்) மற்றும் விளை நிலத்தில் நேரடியாக கொள்முதல் செய்வது, தொடர்பான பயிற்சி ஈரோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்தது.ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க பணியாளர்களுக்கு விளை நிலத்திலேயே, நேரடியாக கொள்முதல் செய்வது குறித்த பயிற்சியை துவக்கி வைத்தார்.விளை பொருட்கள் அதிகம் விளைகின்ற பகுதியை கண்டறிந்து, தினசரி சந்தை விலை மதிப்பு, போக்குவரத்து, ஏற்று கூலி, இறக்கு கூலியை உள்ளடக்கி, இடைத்தரகர்கள் இன்றி சங்கம் விளை பொருட்களை கொள்முதல் செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். அதே சமயம், சங்கமும் லாபம் அடையும் என, யோசனை தெரிவிக்கப்பட்டது.மின்னணு ஏல முறை குறித்தும், விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில அளவில், 164 பேர் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை