மேலும் செய்திகள்
மா விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
28-Oct-2026
ஈரோடு:கோபி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில், மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில், மண்ணில்லா சாகுபடி மற்றும் நுண் கீரைகள் தொடர்பான உள் மாவட்ட பயிற்சி நடந்தது.வீட்டு தோட்டம் வைத்திருக்கும் இல்லத்தரசிகள், விவசாயிகள், பொதுமக்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உதவி இயக்குனர் நர்மத டயானா தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சுரேஷ், சுப்பிரமணி, ஜே.கே.கே.முனிராஜா வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் சுதாகரன் ஆகியோர் மண்ணில்லா சாகுபடி முறை குறித்து விளக்கி, பயிற்சி வழங்கினர்.மைராடா வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சிவா, நுண்கீரைகளின் ஊட்டச்சத்து விபரங்கள், சாகுபடி முறைகள், முதலீடு, லாப கணக்குகளை விளக்கினார். நுண் கீரைகள் சாகுபடி தொழில் முனைவோர் இந்துமணி, நுண் கீரைகள் உற்பத்தி, சாகுபடி, மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்களை விளக்கி, பயிற்சி வழங்கினார்.
28-Oct-2026