மேலும் செய்திகள்
சிறு பாசன கணக்கெடுப்பில் களமிறங்கும் பணியாளர்கள்
09-May-2025
ஈரோடு ;ஏழாவது சிறுபாசன கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, ஈரோடு மாவட்ட அளவிலான குழுக்கூட்டம், பயிற்சி வகுப்பு ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:சிறுபாசன ஆதாரங்களான கிணறு, ஆழ்துளை கிணறுகள், குளம், குட்டை, ஏரி, தடுப்பணை, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டங்கள், நீரேற்று பாசன முறைகளை கணக்கெடுக்கும் முறையாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.சிறுபாசன ஆதாரங்கள் குறித்து தெளிவான, தரமான புள்ளி விபரங்கள் திரட்டி, நீர் வள ஆதாரங்களை மேம்படுத்துவது இதன் நோக்கம். ஆறாவது சிறுபாசன கணக்கெடுப்பு, 2017-19ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு நடந்தது. தற்போதைய கணக்கெடுப்பு, செல்போன் மூலம் தேசிய தகவல் மையத்தின் செயலியில், முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடக்கவுள்ளது. கிராமப்புறங்களில் வி.ஏ.ஓ.,க்களும், நகர்புறங்களில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களும் இதில் ஈடுபடுவர். வருவாய், நகர்புற உள்ளாட்சி, புள்ளியியல் துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்வர். கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் விபரங்களை வழங்கி, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
09-May-2025