உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் விழுந்த திருடனுக்கு சிகிச்சை

கிணற்றில் விழுந்த திருடனுக்கு சிகிச்சை

கிணற்றில் விழுந்ததிருடனுக்கு சிகிச்சைகாங்கேயம், நவ. 1-திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பொத்திபாளையம் தளஞ்சிக்காட்டுப்புதுாரை சேர்ந்தவர் சுப்புகுட்டி, 60. இவர், நேற்று முன்தினம் இரவு பூட்டை பூட்டி விட்டு வெளியே துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு பார்த்தபோது, வீட்டின் கதவை மர்ம நபர் திறந்து கொண்டிருந்தார். அப்போது சத்தம் எழுப்பியவுடன், ஊர் மக்கள் வருவதை பார்த்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். யாரும் இல்லை என அனைவரும் சென்று விட்டனர்.இந்நிலையில் நேற்று காலை, 6:30 மணியளவில் அருகில் விழுந்த கிணற்றிலிருந்து சத்தம் வருவதை அறிந்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் விழுந்தவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், 46, என்பதும், திருட வந்தபோது அனைவரும் சப்தம் எழுப்பியதால், தப்பி ஓடும்போது இருட்டில் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ