மேலும் செய்திகள்
மரக்கன்று நடவு துவக்கம்
30-Oct-2025
காங்கேயம், திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டம் சார்பில் சாலையோரம், 16 ஆயிரம் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காங்கேயம் கோட்ட பகுதியில், 1,500 மரக்கன்று நடப்படுகிறது. இதன்படி மாவட்ட இதர சாலையான சிவன்மலை- வேலாயுதம்பாளையம், கீரனுார்-வேலாயுதம்பாளையம் சாலை ஓரங்களில், 450 மரக்கன்று நடப்பட்டுள்ளது. மற்ற சாலைகளில் வரும் நாட்களில் மீதி மரக்கன்று நடும் பணி நடக்கும் என்று, காங்கேயம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வடிவேல் குமரன் மற்றும் உதவி பொறியாளர் ரஞ்சித் தெரிவித்தனர்.
30-Oct-2025