மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி
ஈரோடு: ஈரோடு, மணல்மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்-மோகன் சிங் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், மன்மோகன் சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்-தினர். முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, அகில இந்-திய காங்., கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் ரவி, சிவகுமார், ராஜேந்திரன், ராஜமாணிக்கம், இலக்கிய செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.