உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி கொங்கு வேளாளர் நிறுவனத்தின் டிரஸ்ட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

தி கொங்கு வேளாளர் நிறுவனத்தின் டிரஸ்ட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஈரோடு:ஈரோடு, பெருந்துறையில் உள்ள தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி டிரஸ்ட் சார்பில், பொறியியல், பாலிடெக்னி, கலை அறிவியல், தொழில் பயிற்சிநிலையம், மெட்ரிக் பள்ளி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த டிரஸ்ட்டுக்கு, 2025-28ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.பழனிசாமி தலைவராகவும், சத்தியமூர்த்தி செயலாளராகவும், ஈ.ஆர்.கார்த்திகேயன் பொருளாளராகவும், கிருஷ்ணன் கொங்கு பொறியியல் கல்லுாரி மற்றும் கொங்கு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ஸர் கல்லுாரி தாளாளராகவும், கே.கார்த்திகேயன் கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி, கொங்கு தனியார் தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மெடிக்கல் கல்லூரி தாளாளராகவும், சச்சிதானந்தன் கொங்குகலை அறிவியல் கல்லுாரி தாளாளராகவும், டாக்டர் செங்கோட்டுவேலன் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.டாக்டர் மாணிக்கம், வெங்கடாசலம், மாலதி இளங்கோ, இளங்கோ மற்றும் டாக்டர் குமாரசுவாமி, ஆகியோர் உபதலைவர்களாகவும், தங்கவேல் மற்றும் பாலகிருஷ்ணன் இணைச்செயலாளராகவும் தேர்வாகினர். புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். இத்தகவலை அறக்கட்டளை தேர்தல் அதிகாரி டாக்டர் குமாரசுவாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை