உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணையில் கோழி திருடிய இருவர் கைது

பண்ணையில் கோழி திருடிய இருவர் கைது

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே தேவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரேம் சந்துரு, 45. இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். 500க்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு பண்ணையில் புகுந்த இருவர் கோழிகளை திருட முயற்சித்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து புன்செய்புளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் பாறைப்புதுாரை சேர்ந்த வெள்ளிங்கிரி, திருமாண்டம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை