சீமான் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரசாரத்தில் ஈடுபட்டார். மரப்-பாலம், மண்டபம் வீதி பகுதிகளில் நடத்தை விதிமீறி பிரசாரம் செய்ததாக இரு வழக்குகளை டவுன் போலீசார் பதிவு செய்திருந்-தனர்.இந்நிலையில் ஈரோடு பெரியார் நகரில் தேர்தல் நடத்தை விதிமீறி-யதாக, டவுன் போலீசாரும், ஈரோடு காளை மாட்டு சிலை பகு-தியில் விதிமீறி பிரசாரம் செய்ததாக, சூரம்பட்டி போலீசாரும் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.