உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்காவுடன் டூவீலர் பறிமுதல்

குட்காவுடன் டூவீலர் பறிமுதல்

புன்செய்புளியம்பட்டி,:பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் அருகே பவானிசாகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஜூபிடர் ஸ்கூட்டரை சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் இருந்தது. டூவீலரில் வந்தவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பவானிசாகரை அடுத்த கோடேபாளையம் ராசு, 42, என்பதும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. குட்காவுடன் டூவீலரை பறிமுதல் செய்து, ராசு மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்