மேலும் செய்திகள்
கர்நாடகா மக்காச்சோளம் கொள்முதலில் ஆர்வம்
04-Nov-2024
கர்நாடக மக்காச்சோளம் கொள்முதல் ஆர்வம்
08-Nov-2024
ஈரோடு: மரபணு மாற்று மக்காச்சோளம் விற்பனையை தடுக்க வலியுறுத்-தப்பட்டுள்ளது.தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்-பாளர் செல்வம், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சையில் உள்ள, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் புட் டெக்னாலஜி, என்டர்பிரனர்ஷிப் அன்ட் மேனேஜ்மென்ட்' மைய ஆய்வறிஞர்கள், வல்லுனர்கள் ஆய்வ-றிக்கை வெளியிட்டனர். அதில், தஞ்சை மாவட்டம் கும்ப-கோணம் அருகே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளம் தானியத்தில் பதப்படுத்தப்பட்ட பண்டங்கள் விற்கப்படுவதை உறுதி செய்துள்ளனர்.பரிசோதிக்கப்பட்ட, 34 மாதிரிகளில், 15.39 சதவீத மக்காச்சோளம் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என கண்டறிந்துள்ளனர். இந்த மாதிரிகள், கும்பகோணத்தில் இருந்து ஒரு மணி நேர பயண துாரத்தில் பெறப்பட்டது தெரியவருகிறது. இவை தடை செய்யப்பட்டவை.எனவே தமிழக அரசு, சட்ட விரோதமாக இந்தியாவில் விற்ப-னையில் இருக்கும் மரபணு மாற்று மக்காச்சோளம், அவற்றின் மூலமான பண்டங்கள் நுழைவதை கண்டறித்து தடுக்க வேண்டும். விதிகளை மீறி இறக்குமதி செய்தவர்கள், வெளியிட செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட், பிற கடைகளில் இருக்கும் மரபணு மாற்று மக்காச்-சோளத்தை திரும்ப பெற்று அழிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
04-Nov-2024
08-Nov-2024