ஜூன் 12ல் ஏரிகளுக்கும் உபரிநீர் திறக்க வலியுறுத்தல்
பா.ஜ.,வின், சேலம் மேற்கு மாவட்ட கூட்டம், மேட்டூர் ஆர்.எஸ்., பகுதியில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமை வகித்தார். அதில், 'அவசர நிலை' காலத்தை கறுப்பு தினமாக நடத்த வேண்டும்; மேட்டூர், ஓமலுார், இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற உழைத்தல்; உள்-ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும், பா.ஜ.,வினர் போட்-டியிடுதல்; மேட்டூர் அணையில் இருந்து ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கும்போதே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் நீர் திறக்க அரசு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலர்கள் ராஜசே-கரன், மகேஸ்வரி, மேட்டூர் நகர தலைவர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.