மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
12-Oct-2024
ஈரோடு, நவ. 2-ஈரோடு மாநகர பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில், 2 மணி நேரத்துக்கு மேல் மின்தடை நீடித்தது.நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடிய நிலையில் ஈரோடு, நாராயணவலசு, நசியனுார் சாலை உட்பட பல்வேறு பகுதியில் மதியம், 2, 3 முறை மின்தடை ஏற்பட்டு தலா, 30 நிமிடங்களுக்கு பின் மின் விநியோகம் தொடர்ந்தது.இரவு, 9:00 மணி முதல் லேசான மழை பெய்ததுடன், சில இடங்களில் காற்று, மின்னல், இடியும் இருந்தது. அப்போதும், இரவு, 11:00 மணி முதல் நாராயணவலசு மின் பகிர்மான பகுதிக்கு உட்பட்ட குமலன்குட்டை, முருகேசன் நகர், கணபதி நகர், வெட்டுக்காட்டு வலச, போஸ்டல் நகர், நசியனுார் சாலையில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. 1 மணி நேரத்தில் மின் விநியோகம் சீரானது. பின் அதிகாலை, 2:00 மணிக்கு மேல் மீண்டும் மின்தடை ஏற்பட்டு, 2 மணி நேரத்துக்கு பின் சீரானது. மின்வாரிய பொறியாளர்கள் கூறுகையில், 'மின் பாதையில் இன்சுலேட்டர் பழுதானதால் மின்தடை ஏற்பட்டது' என்றனர்.
12-Oct-2024