ரூ.100க்கு காய்கறி தொகுப்பு இன்றும், நாளையும் கிடைக்கும்
ஈரோடு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு விற்பனை நிலையத்தில், 100 ரூபாய்க்கு காய்கறி தொகுப்பு விற்பனை நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கந்தசாமி, ஈரோடு மேற்கு எம்.எல்.ஏ., ஆனந்த்மோகன் விற்பனையை துவக்கி வைத்தார்.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா கூறியதாவது:அரசு அறிவிப்பின்படி, 10 வகை காய்கறி அடங்கிய தொகுப்பின் சந்தை மதிப்பு, 158 ரூபாய். அதை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். தொகுப்பில் ஒரு தேங்காய், உருளை கிழங்கு, பெரிய வெங்காயம், இஞ்சி, எலுமிச்சம் பழம், பீன்ஸ், கேரட், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் என, 10 உள்ளன. இவ்விற்பனை மூன்று நாட்களுக்கு நடக்கும். அதுபோல சன்ன ரக அரிசி கிலோ, 30 ரூபாய்; 250 ரூபாய் மதிப்பில், 10 வகையான மளிகை தொகுப்பு பொருள், 200 ரூபாய்க்கு, சிந்தாமணி விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.