உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி

பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி

புன்செய்புளியம்பட்டி: மத்திய அரசின் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியைக் கொண்-டாடும் வகையில், பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளை-யத்தில், பா.ஜ., சார்பில் மூவர்ண கொடியேந்தி நடைபயண பேரணி நேற்று நடந்தது. பவானிசாகர் ஒன்றிய தலைவர் ஞான-சேகர் தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் பேரணியை துவக்கி வைத்து பங்கேற்றார். தொட்-டம்பாளையம் ஐ.ஓ.பி., வங்கி முன்பு துவங்கிய பேரணி முடுக்-கன்துறை சந்தை அருகே நிறைவு பெற்றது. இதில் பா.ஜ., நிர்வா-கிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.இதேபோல் வெள்ளித்திருப்பூரில், அந்தியூர் கிழக்கு மண்டல பா.ஜ., தலைவர் விஜயா ராமு தலைமையில், வெள்ளித்திருப்பூர் நால்ரோட்டிலிருந்து குரும்பபாளையம் பிரிவு வரை நடந்த பேர-ணியில், துணைத்தலைவர் சேகர் குருசாமி, மாவட்ட செயலாளர் மகாலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்-பட, 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி