உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 நாட்களாக இருளில் தவிக்கும் கேர்மாளம் மலை கிராம மக்கள்

3 நாட்களாக இருளில் தவிக்கும் கேர்மாளம் மலை கிராம மக்கள்

சத்தியமங்கலம், தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம் மலை பகுதியில் கடந்த, ௨௫ம் தேதி பலத்த சூறாவளி காற்று வீசியது. மரங்கள் முறிந்து கம்பிகள் மீது விழுந்ததில் கம்பங்கள் உடைபட்டு, மின் தடை ஏற்பட்டது.இதனால் கேர்மாளம், திங்களூர், காடட்டி, கோட்டமாளம் உள்ளிட்ட, 50 மலை கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் மோட்டார் போட முடியாமல் மக்கள் குடிநீரின்றியும், மொபைல்போனுக்கு சார்ஜ் போட முடியாமலும், பிற பகுதியினரை தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். மொபைல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கு, 15 கி.மீ., துாரம் கடந்து கர்நாடக மாநில மலை கிராமத்துக்கு சென்று வருகின்றனர்.இதனிடையே கோபி மின்வாரிய அலுவலக ஊழியர்கள், கம்பங்களை சீரமைத்து, மின் வினியோகம் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இதனால் நேற்று மாலை, ௫:௦௦ மணிக்கு மின்சாரம் கிடைத்தது. ஆனால், ௨௦ நிமிடங்களில் மீண்டும் தடைபட்டது. இதனால் மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை