உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர்-மோர் பந்தல் அமைப்பு

நீர்-மோர் பந்தல் அமைப்பு

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி சார்பில், வெயில் தாக்கத்தில் வாடித் தவிக்கும் மக்களுக்கு, அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதி, நேதாஜி சாலையில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூடும் மத்திய பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட், மணிக்கூண்டு, மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பும் நீர்-மோர் பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.* கோபி பஸ் ஸ்டாண்ட் எதிரே, அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பந்தலை திறந்து வைத்தார். ஏராளமான மக்கள் நீர்மோரை ஆர்வமாக விரும்பி வாங்கி பருகினர். இதனால் சில மணி நேரத்தில், அனைத்து நீர்மோரும் காலியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி