உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வன விலங்களுக்காக தண்ணீர் நிரப்பும் பணி

வன விலங்களுக்காக தண்ணீர் நிரப்பும் பணி

டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் வனச்சரகம் கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதுார் மற்றும் கொங்கர்பாளையம் காவல் சுற்று வனப்பகுதி வனத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது.வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, சில நாட்களாக வனவிலங்கு ஆர்வலர் உதவியுடன், வனத்துறையினர் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறுவது ஓரளவு தடுக்கப்படும். மழை பெய்து தண்ணீர் கிடைக்கும் வரை, தொட்டிகளில் தொடர்ந்து லாரி மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்