உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.மு.எ.க.ச., சார்பில் வரவேற்பு

த.மு.எ.க.ச., சார்பில் வரவேற்பு

ஈரோடு, ஜன. 1-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில், புத்தகங்களுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். கலைக்கோவனின் மருளாடி குறித்து பேராசிரியர் கலைவாணி அறிமுக உரையாற்றினார். கதை சொல்லி சரிதா ஜோவின், 'சாணி வண்டும், பட்டாம்பூச்சியும்' குறித்து இயற்கை மருத்துவர் வினிஷா, எழுத்தாளர் சர்மிளாவின் துணிச்சல்காரி குறித்து எழுத்தாளர் விஜி ரவி, கவிஞர் முத்துகண்ணனின் நாச்சாள் குறித்து மாவட்ட பொருளாளர் கணேசன், இளம் எழுத்தாளர் இளநிலாவின், கயலும் நண்பர்களும் குறித்து மாவட்ட தலைவர் சங்கரன் அறிமுக உரையாற்றினர். நிகழ்ச்சியில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு, ஆசிரியர்கள் ஏற்புரையாற்றினர். கவிஞர் வெற்றிவேல் கவிதை வாசித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றோர், புத்தகங்களுடன், 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ