உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி

ஈரோடு, மொடக்குறிச்சி தொகுதியில் துாய்யம்பூந்துறை, கண்டிக்காட்டுவலசு, ஈஞ்சம்பள்ளி, நஞ்சை ஊத்துக்குளி, முத்துகவுண்டன்பாளையம் பஞ்.,களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோரிக்கை மனுக்களை பெற்று, 38 பயனாளிகளுக்கு, 8.11 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ