112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
காங்கேயம்: வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், காங்கேயம் அருகே ஊதியூரில், பழனி பாதயாத்திரை கோவில் மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில், 112 பயனாளிகளுக்கு, 60.19 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்-வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் வழங்கினார். நிகழ்வில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்றனர். தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, தனித்துணை ஆட்-சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா, காங்கேயம் தாசில்தார் மோகனன், குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செய-லாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.